கோவையில் அதிமுக எம்எல்ஏ மகன் திடீர் மரணம்… ஆதரவாளர்கள், தொண்டர்கள் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2023, 10:36 am

கோவையில் அதிமுக எம்எல்ஏ மகன் திடீர் மரணம்… ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சி!!

கோவை வடக்கு தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், கோவை மாநகர் மாவட்டச் செயலாளராக இருப்பவர் அம்மன் அர்ஜுனன். இவரது மகன் கோபாலகிருஷ்ணன். அதிமுகவில் கோவை தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட இணைச் செயலாளராக இருந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கோபாலகிருஷ்ணனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதுது. இதனையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை கோபாலகிருஷ்ணன் உயிரிழந்தார்.

கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் மகன் திடீர் மரணம் அவரது ஆதரவாளர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!