எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயக பாதுகாப்பு கொடுக்கும் ஆட்சி அதிமுக ஆட்சி : அமைச்சர் செல்லூர் ராஜு..

9 November 2020, 1:23 pm
Madurai Sellur Raju - Updatenews360
Quick Share

மதுரை : திமுக ஆட்சிக்கு வந்தால் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய முடியாது என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

மதுரையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையே அரசியல் செய்ய முடியாத அளவிற்கு மிரட்டினார்கள். மனித வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என மிரட்டல் விடுத்தார்கள். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது.
அமைதி சூழலை அனைத்து அரசியல் கட்சிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கூறினார்.

தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்கு அதிமுக அரசு எந்த குறுக்கீடு செய்வதில்லை. ராஜபக்சே கொலை குற்றவாளி எனவும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியது அதிமுக அரசுதான். 7 பேர் தூக்கு மேடைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்தியது அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுதான் என்றார்.

மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு போன்று 7 பேர் விடுதலை குறித்து உரிய நடவடிக்கையை முதல்வர் மேற்கொள்வார். 7 பேர் விடுதலை விவகாரத்தில் முதல்வர் எந்தவித சமரசமும் செய்துகொள்ள மாட்டார் என்று கூறினார்.

தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் இதுபோன்ற காரணங்களை முன்னெடுத்து அரசியல் செய்ய சொல்லும் கருத்தை பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் இப்போது அல்ல கருணாநிதி காலம் முதல் இதுபோன்ற குற்றச்சாட்டை திமுக முன்வைப்பது வாடிக்கைதான் என்றார்.

அமைச்சரின் இறப்பில் கொச்சைப்படுத்துவது எதிர் கட்சி தலைவருக்கு அழகல்ல என்று கூறிய அமைச்சர்,
ஒவ்வொரு கட்சிகளும் தங்களது கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக கைகாட்டும் கட்சிதான் ஆட்சி அமைக்கும் என்ற கருத்தை எல்.முருகன் தெரிவித்திருக்கிறார் என்றார்.

அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுக அரசிற்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனம் செய்து வருவது குறித்த கேள்விக்கு, கூட்டணி கட்சிகள் தற்போது நண்பர்களாக உள்ளனர், அவரவர் தங்களுடைய கொள்கையை மக்களுக்கு கொண்டு செல்லவும் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் பல்வேறு கருத்துக்களை தெரிவிப்பது வழக்கமான ஒன்று தான் என்றார்.

கூட்டணி தர்மம் என்பது தேர்தல் நேரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தபின்னர் தவறாக பேசினால் மட்டுமே அது தவறு அதற்கு முன்னதாக விமர்சிப்பது வழக்கமான ஒன்றுதான் என்றும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.

Views: - 17

0

0