சவுக்கு சங்கர் மீது பாய்ந்து பாய்ந்து ஆக்ஷன் எடுத்த அரசு ஏன் பொன்முடி மீது எடுக்கவில்லை? விந்தியா ஆவேசம்!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2025, 4:25 pm

கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் இன்று கோவை மாவட்ட அ.தி.மு.க மகளிர் அணி சார்பில் தி.மு.க அரசை கண்டித்தும் அமைச்சர் பொன்முடியை பதவி விலகக் ஓரியம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.கூட்டத்தில் அ.தி.மு.க தலைமைக் கழக பேச்சாளர் நடிகை விந்தியா பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, ஆட்சி பெண்கள் புரட்சியாளர் அகற்றப்பட போகிறது. அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் முன்னாள் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பெண்களுக்காக ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தார்கள்.

தமிழ்நாட்டில் பெண்கள் காவல் நிலையம் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தான் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இன்று கல்லூரி மாணவிகள் முதல் முதியோர் பெண்கள் வரை பாதுகாப்பாக இல்லை. பாலியல் தொல்லையால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். பெண்கள் சாபம் பொல்லாதது.

தி.மு.க ஆட்சி இன்னும் பத்து மாதம் தான். விடியல் தருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்து என்ன செய்தார்கள். என்ன சாதனை செய்தார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. சாதனை எதுவும் செய்யவில்லை. வேதனை தான் மிஞ்சுகிறது. இது பெண்களுக்கு எதிரான ஆட்சி. பெண்களை விளையாட்டு பொம்மையாகி விட்டார்கள். இதுதான் உண்மை.

கடந்த நான்கு வருடத்தில் மட்டும் 20 ஆயிரம் பாலியல் வழக்குகள் பதிவாகி உள்ளன. அனைத்தும் போட்டோ வழக்குகள். இதில் பாதி வழக்குகளுக்கு மேல் தி.மு.க வினர் தான் தொடர்பு உள்ளனர். சட்ட சபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மக்களுக்கு பாதுகாப்பு இல்லை சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

பொள்ளாச்சி வழக்கில் எங்களை குற்றம் காட்டுபவர்கள் கடந்த 4 வருட காலத்தில் அவர்களை Technologies போனது ஏன்? அதில் திமுகவினர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். தி.மு.க வினர் அந்த காலத்தில் இந்திரா காந்தி முதல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவரை பெண்களை அவமதிப்பு தான் செய்கிறார்கள். சட்டசபையில் ஜெயலலிதாவை அசிங்கப்படுத்தினார்கள் .

இப்போது திராவிட முன்னேற்றக் கழகம் இப்போது திராவிட மன்னிப்புக் கழகமாக மாறி விட்டது. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக் காலத்தில் எத்தனையோ புயல் வெள்ளம் வந்தது. ஆனால் அவர்களை அனைத்திலும் இருந்து பாதுகாத்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் தி.மு.க ஆட்சி காலத்தில் என்ன செய்தார்கள்.

வீரத்தைப் பற்றி தி.மு.க வினர் பேச கூடாது. கொரோனா காலத்தில் ஆறு மாதம் டாஸ்மாக்கை மூடி வைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் தி.மு.க வினரால் ஈஸ்டர் பண்டிகைக்கு கூட டாஸ்மாக்கை மூட முடியவில்லை.

முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் தி.மு.க வினரை கண்ட்ரோலாக வைத்து இருக்க முடியவில்லை. அவுட் ஆப் கண்ட்ரோல் ஆகிவிட்டது. முதலமைச்சரும் தப்பு தப்பாக பேசுகிறார். அமைச்சர்களும் பெண்களைப் பற்றி தப்பு தப்பாக பேசுகிறார்கள்.

பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடந்தாலும் யாராவது பேசினாலும் அதை வெளியில் வரக் கூடாது என்று தான் பார்க்கிறார்கள். இந்தி எதிர்ப்பு போராட்டம் என்று திசை திருப்புகிறார்கள். இந்தியை ஒழிப்போம் என்பவர்கள் சாராயத்தை ஒழிப்போம் என்று கூற வேண்டியது தானே.

இவர்கள் அனைவரும் மக்களை ஏமாற்றுகிறார்கள். ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு இலவச உதவி தொகை கொடுத்து விட்டு நீங்கள் மேக்கப் போடலாம் என்கிறார் ஒரு அமைச்சர். இவர்கள் அனைவரையும் தூக்கி சாப்பிடுவது போல் பொன்முடி பேசி உள்ளார்.

ஏற்கனவே பெண்களை குறித்து ஓசி டிக்கெட் என்றவர் தான். இவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலினையும் மதிப்பதில்லை. இப்போது சைணவம் வைணவம் குறித்து அமைச்சர் பொன்முடி கேவலமாக பேசி உள்ளார். அதை காமெடி என நினைத்து கை கொட்டி சிரிக்கிறார்கள். அ.தி.மு.க வில் யார் தப்பாக பேசினாலும் அது அமைச்சராக இருந்தாலும் சாதாரண தொண்டராக இருந்தாலும் அவர்கள் கதி என்ன ஆகும் என்பது சாதாரண தொண்டனுக்கும் தெரியும். ஆனால் அமைச்சர் பொன்முடி குறித்து யாரும் தட்டிக் கேட்கவில்லை.

ஒரு அமைச்சர் அவருக்கு ஆதரவாக வார்த்தை கிளிப் ஆகிவிட்டது என்கிறார். ஏன் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்கு பதிவு செய்யவில்லை என்றால் அவரை கட்சி பொறுப்பில் இருந்து தூக்கி விட்டோம் என்கிறார்கள். அவரை அமைச்சர் பதவியில் இருந்து தூக்கி வீசுங்கள். அவர் மீது வழக்கு பதிவு செய்யுங்கள்.

சவுக்கு சங்கர் உள்ளிட்டவர்கள் மீது பாய்ந்து பாய்ந்து நடவடிக்கை எடுக்கிற போலீசார் ஏன் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். போலீசார் வேடிக்கை பார்க்கிறார்கள்.

இது தான் தி.மு.க வின் ஆட்சி இலட்சணம். தி.மு.க ஆட்சியில் கடவுளுக்கும் மதிப்பு இல்லை. கடவுளுக்கு ஒப்பான பெண்களுக்கும் மதிப்பு இல்லை. இப்போது அ.தி.மு.க கூட்டணி குறித்து தி.மு.க வினர் பயப்படுகிறார்கள். அவர்கள் பயந்து தான் ஆக வேண்டும்.

மு க ஸ்டாலின் நாங்கள் எந்த ஷா வுக்கும் பயப்பட மாட்டோம் என்கிறார். ஏற்கனவே தி.மு.க ஆட்சியை கலைத்தவர் ஒரு ஷா தான் திமுகவினரை தூக்கி போட வேண்டும். அமைச்சர் பொன்முடியை தள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!