பேக்கரி டீலிங்… நீட் தேர்வு குறித்து காரசாரம் : அமைச்சருக்கு அதிமுக கடும் எதிர்ப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
21 April 2025, 1:09 pm

நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக – அதிமுக இடையே காரசார வாதம் நடந்தது.

அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி, எத்தனை மருத்துவக் கல்லூரிகளை நீங்கள் கொண்டு வந்தீர்கள் என திமுகவினரை நோக்கி கேள்வி எழுப்பினார்.

இதையும் படியுங்க: எத்தனை வருடம் தான் காத்திருப்பது? மீண்டும் மீண்டும் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ!

அப்போது எழுந்து பேசிய அமைச்சர் சிவசங்கர், அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்ததாக சொல்றீங்க, ஆனா பேக்கரி டீலிங் மாதிரி, நீட் தேர்வை உள்ளே கொண்டு வந்து, அதற்கு பதிலாக 11 மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றீர்கள் என கூறினார்.

AIADMK strongly opposes minister over NEET exam controversy

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள் கடும் விவாதத்தை ஏற்படுத்தினர். ஆனால் அமைச்சர் சிவசங்கர் தொடர்ந்து பேக்கரி டீலிங் என 3 முறை முழங்கியதால் அதிமுகவினர் பேரவையை விட்டு வெளியேறினர்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?
  • Leave a Reply