“அதிமுக வெற்றி பெற பாடுபடுவோம்“ : திருப்பூர் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற பொள்ளாச்சி ஜெயராமன் சூளுரை!!

19 November 2020, 4:50 pm
Pollachi Jayaraman- Updatenews360
Quick Share

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட அதிமுகவின் புதிய மாவட்டச் செயலாளராக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரக் கூடிய சூழ்நிலையில் அதிமுகவில் திருப்பூர் வடக்கு , தெற்கு மற்றும் காங்கேயம் தொகுதிகளை உள்ளடக்கிய புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட செயலாளராக பொள்ளாச்சி ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளார் .

இதனையடுத்து இன்று திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலை போல மாநகர மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற அனைவரும் ஒருங்கிணைந்து உழைத்திட வேண்டும் என மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று கொண்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கேட்டுக்கொண்டார் . இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் , முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Views: - 25

0

0