அதிமுகவின் இருகண்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ் : பொன்விழாவை முன்னிட்டு அண்ணமாலை வாழ்த்து!!

Author: Udayachandran RadhaKrishnan
17 October 2021, 10:08 am
Annamalai Wish - Updatenews360
Quick Share

சென்னை : அதிமுகவின் பொன் விழா கொண்டாடப்படும் நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1972-ஆம் ஆண்டு அக்டோபர் 17-இல் அண்ணா திமுக என்ற மகத்தான இயக்கத்தை தொடங்கினார். இந்த நாளில் தான் அதிமுக உருவானது என்பதை நினைவு கூறும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை அதிமுகவினர் மிகவும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.

அந்த வகையில் இன்று அதிமுகவின் பொன் விழா கொண்டாடப்படும் நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
இது குறித்து டுவிட் செய்த அவர், ‘பொன்மனச் செம்மல் உருவாக்கிய அதிமுக பொன்விழாவை தொடங்கும் நாள் இன்று. தொண்டர்கள் பலத்தையும் மக்கள் செல்வாக்கையும் நம்பி 1972ல் தொடக்கம், 1997-ல் நெல்லையில் புரட்சித்தலைவி அமைத்த வெள்ளி விழா. சிறப்பு அழைப்பாளராக பாஜக தேசியத் தலைவர் எல்.கே.அத்வானி அய்யா அவர்கள்!

அந்த இரு தலைவர்களின் இருக்கும் பிம்பங்களாக ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் கண்களைப் போல கழகத்தை காக்க, பல நூற்றாண்டு காலம் தமிழ் போல் வாழ்க என தமிழக பாஜக சார்பில் வாழ்த்துகிறேன்!’ என பதிவிட்டுள்ளார்.

Views: - 259

0

0