ஏர் இந்தியா விமானம் விபத்துக்கு காரணம் பறவைகள் அல்ல.. விபத்துக்கு முன் விமானிகள் பேசிய ஷாக் ஆடியோ!
Author: Udayachandran RadhaKrishnan12 July 2025, 1:59 pm
கடந்த ஜூன் 12 அன்று குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 விமானம், 800 அடி உயரத்தில் பறந்தபோது கட்டடம் மீது மோதி வெடித்து சிதறியது.
இந்த கோர விப்ததில் ஒரு பயணியைத் தவிர 241 பேர் உட்பட 275 பேர் உயிரிழந்தனர். விமானத்தின் கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இதையும் படியுங்க: லிஃப்ட் கேட்ட மாணவன்… மது குடிக்க சொல்லி கொடூர தாக்குதல் : கோவையில் பகீர் சம்பவம்!
விமான விபத்து புலனாய்வு பணியகம் (AAIB) சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தியது. ஜூலை 12 அதிகாலை வெளியான 15 பக்க முதற்கட்ட அறிக்கையில், விமானம் புறப்பட்ட 32 வினாடிகளில் இரு இன்ஜின்களும் பழுதடைந்ததே விபத்திற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறப்பட்ட சில வினாடிகளில் இரு இன்ஜின்களும் செயலிழந்தன; ஒரு விமானி எரிபொருள் வால்வு மூடப்பட்டதாகக் கேட்டபோது, மற்றவர் மறுத்தார். பின்னர் ஒரு இன்ஜின் மட்டும் செயல்பட்டது.
கட்டடங்கள் மீது மோதி தீப்பிடித்ததால் விமானம் முற்றிலும் அழிந்தது. பறவைகள் மோதியதற்கான ஆதாரம் இல்லை. வெப்ப சேதமே விபத்திற்கு காரணமாக இருக்கலாம்; முழு அறிக்கைக்கு 6 மாதங்கள் ஆகும் என AAIB தெரிவித்துள்ளது.
