வீட்டில் முடங்கிய மக்கள்… சென்னையில் குறைந்தது காற்று மாசுபாடு!

25 March 2020, 7:51 pm
curfew 01 updatenews 360
Quick Share

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கியதால், வாகனப்பயன்பாடின்றி, காற்று மாசுபாடு குறைந்துள்ளது.

கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையடுத்து மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.  ஏற்கனவே மக்கள் ஊரடங்கு கடை அனுசரிக்கப்பட்டது; அதை தொடர்ந்து மக்களின் வாகனப் பயன்பாடு குறைந்தே காணப்பட்டது; மேலும், தொழிற்சாலைகளும் தற்போது இயங்காததால் சென்னை நகரில் காற்று மாசுபாட்டை குறைத்துள்ளது தெரிய வந்திருக்கிறது.

காற்றில் நுண்துகள் கரையும் அளவான 2.5 பி.எம் என்பது சென்னை நகரின் பல இடங்களில் குறைந்துள்ளது. இன்று பகல் நிலவரப்படி சென்னை அண்ணாசாலை மற்றும் வேளச்சேரியில் 2.5 பி.எம். அளவு 53 ஆகவும், ஆலந்தூரில் 51, தொழிற்பேட்டைப்பகுதியான மணலியில் 6 ஆக இருந்ததாக, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.