விசிகவினரை வெ** வீசியிருப்பேன்.. நைட்ல லுங்கியோடு திருமா சுத்திட்டிருக்காரு… ஏர்போர்ட் மூர்த்தி பகீர்!
Author: Udayachandran RadhaKrishnan6 September 2025, 4:54 pm
சென்னை டிஜிபி அலுவலகத்தில் பாமக நிறவனர் ராமதாஸ்க்கு பாதுகாப்பு கேட்டு பாமகவினர் சிலர் வந்தனர். அவர்களுடன் புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி வந்திருந்தார்.
அப்போது அங்கு காத்திருந்த 4 பேர் கொண்ட கும்பல், ஏர்போர்ட் மூர்த்தியை சரமாரியாக தாக்கி, அங்கிருந்து தப்பினர். அவர்கள் செருப்புகளால் மூர்த்தியை தாக்கினர்.

விசாரித்ததில், விசிக தலைவர் திருமா குறித்து அசிங்கமான வார்த்தைகளில் அவதூறாக ஏர்போர்ட் மூர்த்தி பேசியதால் ஆத்திரமடைந்த விசிகவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்ததுடன், சட்டம் ஒழுங்கு குறித்து கேள்விகளை எழுப்பினர். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஏர்போர்ட் மூர்த்தி, விசிகவினர் தாக்கும் போது என்னிடம் கத்தி இல்லை, இருந்திருந்தால் வெட்டி வீசியிருப்பேன் என்று கூறினார்.

மேலும் இரவில் அடிக்கடி திருமாவளவன் தனியாக லுங்கியோடு தான் சுற்றுகிறார். நான் நினைத்தேன் என்றால், லுங்கி அவுத்துவிடலாமல்லவா? கூலிப்படையை வைத்து என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
காவல்துறையில் புகார் அளித்தால், ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள் என கூறுகின்றனர். இதை சொல்வதற்கு காவல்துறைதான் வெட்கப்பட வேண்டும் என கூறினார்.
