அடுத்த Bike Ride பயணத்திற்கு தயாரான அஜித்.. உலகத்தை சுற்ற முடிவு.?

Author: Rajesh
18 June 2022, 10:31 am

நடிகர் அஜித் எப்போதும் தனது கனவை நோக்கி பயணம் செய்பவர். சினிமாவில் நடிக்க தொடங்கி இதுவரை 60 படங்கள் நடித்து முடித்துவிட்டார். அவரது 61வது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டு நடந்து வந்த நிலையில் இப்போது இடைவேளை விடப்பட்டுள்ளது போல் தெரிகிறது.

காரணம் அஜித் தனக்கு பிடித்தமான ஒரு விஷயத்தை செய்ய கிளம்பியுள்ளார், வேறுஒன்றும் இல்லை கடந்த சில வருடங்களாக பைக்கில் உலகத்தை சுற்ற முடிவு செய்து அதனை நோக்கி பயணம் செய்துகொண்டிருந்த அஜித் இப்போது அடுத்த சுற்றுலாவை தொடங்கியுள்ளார்.

அவர் இந்த முறை UK, Europe போன்ற இடங்களில் பைக்கில் சுற்ற கிளம்பியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை அஜித்துடன் பைக்கில் பயணம் செய்யும் சிலர் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். பிரம்மிப்பான பைக்குடன் அஜித் எடுத்த புகைப்படங்கள் இப்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?