விக்ரம் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் கொடுக்க தயாராகும் அஜித் ரசிகர்கள்.. ஏன் தெரியுமா.?

Author: Rajesh
26 May 2022, 7:22 pm
Quick Share

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘விக்ரம்’ திரைப்படம் வரும் 3ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வெளியாகும் தினத்தில் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுக்க அஜித் ரசிகர்கள் தயாராகி வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘விக்ரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் நடிக்க இருக்கும் தளபதி 67 படத்தை இயக்கயிருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் தான் அஜித் ரசிகர்களின் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இணையதளங்களில் அஜித் படம் வெளியாகும்போது விஜய் ரசிகர்களும், விஜய் படம் வெளியாகும்போது அஜித் ரசிகர்களும் முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் ஏராளமான நெகட்டிவ் விமர்சனங்களை குவித்து விடுவார்கள். இந்த நிலையில் தற்போது கமல் படத்திற்கும் அஜித் ரசிகர்கள் நெகட்டிவ் கமெண்ட் கொடுக்க தயாரானது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 967

0

0