“NO” என்ற ஒரே வார்த்தையில் முடித்து வைத்த அஜித்.. யோசனையில் விக்னேஷ் சிவன்..!

Author: Rajesh
21 May 2022, 11:43 am

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்துவாக்குல 2 காதல் படம் சமீபத்தில் வெளிhகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனையடுத்து அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கயுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
நடிகர் அஜித் ‘ஏகே 61’ என்று பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் அஜித் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் விக்னேஷ் சிவனுடன் அஜித் இணையுள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் ஏற்கனவே விக்னேஷ் சிவன் அஜித் ரசிகர்களுக்கு இப்படம் கண்டிப்பாக திருப்தி அளிக்கும் என கூறியிருந்தார். மேலும் இப்படத்தில் என்னுடைய நூறு சதவீத உழைப்பை போடுவதாகவும், கதை சரியாக அமைத்து நடிகர், நடிகைகளை திறம்பட தேர்வு செய்தால் கண்டிப்பாக படம் வெற்றி பெறும் என்று உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில் படத்தின் கதையை முழுவதுமாக எழுதிவிட்டு அஜித்திடம் காட்டியுள்ளார் விக்னேஷ் சிவன். இதைப் படித்துவிட்டு அஜித் இதில் அரசியல் விமர்சனங்கள் தேவையே இல்லாத ஒன்று, அத்துடன் சம்மந்தமே இல்லாத இடத்தில் பஞ்ச் டயலாக்குகள் எதற்கு இதையெல்லாம் மாற்றுங்கள் என்று கூறியுள்ளாராம்.

இந்நிலையில் சில விஷயங்களை மாற்றினால் கதை முழுவதுமாக மாறிவிடும் என்ற பயத்தில் உள்ளாராம் விக்னேஷ் சிவன். மேலும் அஜித்துக்கு பிடித்தபடி இந்த கதையை எப்படி மாற்றுவது என்று தனி அறையில் யோசித்து வருகிறாராம்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?