நான் அந்த படத்துல நடிச்சதுக்கு காரணம் அஜித் தான்.. பிரபல நடிகர் ஓப்பன் டாக்.!

Author: Mari
23 June 2022, 6:09 pm
Quick Share

விஜய்யின் ‘பகவதி’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஜெய். இதைத்தொடர்ந்து இவர் நடித்த ‘சென்னை 600028’, ‘சுப்ரமணியபுரம்’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘ராஜா ராணி’ போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி ஜெய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது.

இந்த நிலையில், சுந்தர் சி இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள திரைப்படம் தான் ‘பட்டாம் பூச்சி’ இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கலகலப்பு 2’ படத்திற்குப்பிறகு, இப்படத்தில் ஜெய்- சுந்தர் சி மீண்டும் இணைந்துள்ளனர். பத்ரி நாராயணன் இயக்கியுள்ளார். குஷ்புவின் அவ்னி பிக்சர்ஸ் தயாரிக்க நவ்னீத் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் ஒரு பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் பற்றி பேசியுள்ளார். அவர் பேசியதாவது, சுப்பிரமணிபுரம் படத்தின் கதை நன்றாக இருக்கிறது. அந்த படத்தில் நீ நடிக்கலாம் என்று அஜித் அவரிடம் கூறியதாக அதில் தெரிவித்துள்ளார்.

Views: - 111

2

0

Leave a Reply