நிகிதா சொன்னது எல்லாமே பொய்…அநியாயமா அஜித் உசிரு போச்சே : சிபிஐ பகீர்!!
Author: Udayachandran RadhaKrishnan9 August 2025, 4:07 pm
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக இருந்த அஜித்குமார் (27), நகை திருட்டு புகார் தொடர்பாக சிறப்பு தனிப்படை போலீசாரால் ஜூன் 28-ல் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த பயங்கர சம்பவத்தில் 5 போலீசார் (கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர் மணிகண்டன்) கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சி.பி.ஐ. அதிகாரிகள் அஜித்குமாரின் தாய் மாலதி, சகோதரர் நவீன் குமார், நண்பர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். புகார் கொடுத்த நிகிதாவிடமும் விசாரணை நடந்தது
ஜூன் 27ம் தேதி நிகிதா தனது காரை கோவில் பார்க்கிங்கில் நிறுத்த சாவியை அஜித்குமாரிடம் கொடுத்தார். அவர் அதை ஆட்டோ டிரைவர் அருண்கிடம் கொடுத்து, காரை கோவில் எதிரே பார்க்கிங்கில் நிறுத்தச் செய்தார். 2 நிமிடத்தில் சாவி நிகிதாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், நிகிதா தனது புகாரில், சாவி நீண்ட நேரம் தரப்படவில்லை, அஜித்குமாரும் அருணும் காரை வடகரை வரை ஓட்டியதாக கூறினார். சி.பி.ஐ. விசாரணையில், வடகரைக்கு கார் செல்லவில்லை என்பது உறுதியானது. நிகிதாவே காரை ஓட்டி சென்று மீண்டும் திரும்பி வந்தது கேமராவில் பதிவாகியுள்ளது. கோவில் பார்க்கிங்கில் காரை 2 நிமிடத்தில் நிறுத்தி, 8 நிமிடத்தில் சாவி ஒப்படைக்கப்பட்டது
கிதாவின் புகார் முரண்பாடுகளால் நிரம்பியுள்ளது. பொய் புகார் கொடுத்ததாக சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவுக்கு வந்துள்ளனர், இந்த வழக்கு இனி எங்கே போகுது? நிகிதாவின் பொய் புகாரால் ஒரு உயிர் பறிபோன மர்மம் அவிழுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
