இருசக்கர வாகனத்தில் குடம் வைத்து “தண்ணி“ கடத்தல் : விற்பனை செய்தவர் கைது.!!
16 August 2020, 4:44 pmதேனி : உத்தமபாளையம் அருகே இரு சக்கர வாகனத்தில் குடம் வைத்து தண்ணீர் எடுப்பது போன்று நூதன முறையில் மதுபாட்டில் கடத்தி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோவிந்தம் பட்டியில் தண்ணீர் பிடித்து செல்வதைப்போல இரண்டு சக்கர வாகனத்தில் இரண்டு குடங்களை கட்டிக்கொண்டு தண்ணீர் எடுத்துச் செல்வது போல் ஒருவர் சென்றுள்ளார்.
சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அரசு மதுக்கடைகளில் மதுபானங்களை வாங்கிக் கொண்டு தங்கள் கிராமப்பகுதிகளில் அதிக விலைக்கு விற்று வந்தது தெரியவந்துள்ளது.
மேலும் மதுபான கடைகள் விடுமுறை நாளன்று அதிகளவில் மதுபானங்களை வாங்கியும் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார் .இதனால் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட உத்தமபாளையம் காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.