கோவையில் வரும் 1ம் தேதி கலவரம் நடத்த அனைத்து ஜமாத்துகளும் முயற்சி : இந்து முன்னணி மாநிலத் தலைவர் பரபரப்பு புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 March 2022, 2:14 pm
Kadeswara Subramanian - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் ஜமாத் அமைப்புகள் இணைந்து போராட்டம் நடத்தி அதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக இந்து முன்னணியினர் மேற்கு மண்டல காவல்துறைத் தலைவரிடம் புகார் மனு அளித்துள்ளனர்

இதுகுறித்து இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது : வரும் 1ம் தேதி அனைத்து ஜமாத் இணைந்து கோவையில் போராட்டம் நடத்தி அதன் வாயிலாக கலவரம் நடத்த முயற்சி நடைபெறுகிறது. அதற்காக பொறுப்பு காவல் ஆணையராக உள்ள மேற்கு மண்டல காவல்துறைத் தலைவரிடம் மனு அளித்துள்ளோம்.

கோவையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படாமல் உள்ளனர். காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிட்ட திரையரங்குகளை முற்றுகையிட முயற்சித்து செய்கின்றனர்.

அதனால் தான் காவல்துறை அதிகாரிக்ளிடம் மனு அளித்துள்ளோம். இந்துக்கள் வசிக்கும் பகுதிகளில் குரானை கொடுக்கின்றனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இத்தகைய நபர்களை உளவுத்துறையை வைத்து முறையாகக் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது இந்து முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமார், செய்தி தொடர்பாளர் தனபால் ஆகியோர் உடனிருந்தனர்

Views: - 258

0

0