சாராயக்கடையை மூடிடு… சன்னதியை திறந்திடு… கோவில்களை திறக்கக்கோரி தமிழகம் முழுவதும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்..!!

25 June 2021, 11:40 am
Hindu munnai protest - updatenews360
Quick Share

கோவில்களை திறக்கக் கோரி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் கோயில்கள் சூடம் முன்பு ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநிலம் தழுவிய இந்து முன்னணி சார்பில் தமிழக அரசு ஆலைகளை திறக்க கோரி கோயில்கள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கரூரில் உள்ள மாரியம்மன் கோவில், கோடீஸ்வரன் கோவில், பசுபதீஸ்வரர் ஆலயம் முன்பாக இந்து முன்னணி நகரச் செயலாளர் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கற்பூரம் ஏற்றியும், தமிழக அரசை ஆலயங்களை திறந்து பக்தர்கள் வழிபாடு செய்ய ஆலயங்களை திறக்க கோரியும் வேண்டுகோள் விடுத்தனர்.

அதோடு, மதுக்கடைகளை தமிழக அரசு மதுபான கடைகளை திறப்பதை கைவிட்டு, ஆலயங்களை திறந்து பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கக் கோரி கண்டன கோஷம் எழுப்பினர்.

Views: - 259

0

0