திமுக கூட்டணியா? தவெக கூட்டணியா? விரைவில் அறிவிக்கும் தேமுதிக : விஜய பிரபாகரன் சூசகம்!

Author: Udayachandran RadhaKrishnan
6 June 2025, 1:55 pm

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த ஆண்டிப்பட்டி கோட்டை பகுதியில் தேமுதிக ஒன்றிய செயலாளர் சின்னசாமி இல்ல திருமண விழாவில் தேமுதிக இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதையும் படியுங்க: 2½ வயது குழந்தை பாலியல் வன்கொடுமை… குற்றவாளியை என்கவுன்டர் செய்த போலீஸ்..!!

விழாவில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் அவருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்த் பிரபாகரன்: தேமுதிக வளர்ச்சியை நோக்கி செல்வது சந்தோசமாக உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி. ஆனால், தற்போது தேமுதிக வளர்ச்சியை நோக்கி தான் எங்கள் நிலைப்பாடு உள்ளது.

Alliance with DMK or TVK... DMDK to make announcement

ஜனவரி 9 கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணியை பற்றி அறிவிப்பார். 2026-ல் தமிழக வெற்றி கழகம் விஜயுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு ஜனவரி 9 தான் தெரியவரும் என்றார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!