பட்ஜெட்டில் தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குங்க.. நிதியமைச்சருக்கு அமைச்சர் சேகர்பாபு வலியுறுத்தல்!

Author: Udayachandran RadhaKrishnan
1 February 2024, 10:51 am

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குங்க.. நிதியமைச்சருக்கு அமைச்சர் சேகர்பாபு வலியுறுத்தல்!

தமிழகத்திற்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு வலியுறுத்தியுள்ளார்.

சென்னை வளசரவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மழை, வெள்ள பாதிப்புகளால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு மத்திய அரசு முறையாக நிதி வழங்கவில்லை. தேவைகள் அதிகமாக இருப்பதால் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பழனி கோயில் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. நீதிமன்ற இறுதி தீர்ப்பை பொறுத்தே, அரசின் நிலைப்பாட்டை தெரிவிப்போம். தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு கிட்டத்தட்ட 1,339 கோவில்களில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் திருக்கோவில்கள், திருத்தேர்கள், பசுமடங்கள், தங்குமிடங்கள், விருந்து மண்டபங்கள் என்று 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிகள் ரூ.4,157 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?