அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த பாஜகவினர் மீது விசிகவினர் தாக்குதல்..!!

14 April 2021, 1:57 pm
madurai - vck - updatenews360
Quick Share

மதுரை : மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினர் மீது விசிகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பேத்கரின் 130வது பிறந்த நாளையொட்டி மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் அதிமுக, திமுக, மதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வந்தனர்.

இந்த நிலையில், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பாஜக மதுரை புறநகர் மாவட்ட தலைவர் தலைமையில் பாஜகவினர் 10க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர்.

இந்த நிலையில், பாஜகவினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினார்கள். திடீரென பாஜகவினர் மீது விசிகவினர் கற்கள், பிளாஸ்டிக் பைப்களை கொண்டு தாக்குதல் நடத்தினார்கள். விசிகவினர் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் கூடியிருந்த பாஜகவினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செய்யவிருந்த நிலையில், பாஜகவினர் மீது விசிகவினர் நடத்திய தாக்குதல் பரரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 30

0

0