மேம்பால வேலையால் ஆம்புலன்ஸ் வாகனமும் காத்திருக்கும் அவலம் : விதிகளை மீறும் தனியார் பேருந்துகள்..!!

Author: Udayachandran RadhaKrishnan
25 April 2023, 4:03 pm

கோவை மேட்டுப்பாளையம் சாலை ஜி என் மில்ஸ் பகுதியில் பாலம் வேலை பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. கவுண்டம்பாளையம் பாலம் வேலை நிறைவடைந்து தற்போது மக்கள் பயன்படுத்தி வர கூடிய சூழலில் அடுத்ததாக ஜி என் மில்ஸ் பகுதியில் பாலம் வேலை நடைபெற்று வருகிறது.

பாலத்தின் இருபுறங்களில் உள்ள ரோடுகள் சிறிய அளவில் உள்ளதால் வாகனங்கள் அந்த பகுதியில் ஊர்ந்து செல்லக்கூடிய நிலையை காணப்படுகிறது.

அதேபோல காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் அணிவகுத்து இருக்கக்கூடிய காட்சிகளையும் அந்த பகுதியில் நம்மால் பார்க்க முடிகிறது.

அந்த வழியாக வரும் தனியார் பேருந்துகள் சாலையில் ஒன் வே வழியாக வருவதாகவும் அதேபோல வரக்கூடிய ஆம்புலனஸ்களுக்கு வழி விடாமலும் உள்ளனர்.

ஆம்புலன்ஸ் கூட காத்திருக்க கூடிய அவலமாக உள்ளதாகவும்
சாலையில் டிராபிக் அதிக அளவில் இருப்பதால் இந்த பகுதியில் சாலையை இருபுறமும் அதிக படுத்த வேண்டும் என்றும் அதேபோல போக்குவரத்து காவலர் இந்த பகுதியில் நிற்க வேண்டும் என்றும், பால வேலையையும் துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையானது எழுந்துள்ளது.

அதனை ஒரு நபர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.தற்பொழுது அது வைரலாகி வருகிறது

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!