“சென்னையில் ஒரு நாள்“ பட பாணியில் நடந்த சம்பவம் : உடல் உறுப்பை சுமந்து கொண்டு மின்னல் வேகத்தில் ‘சீறிய‘ ஆம்புலன்ஸ்!!

Author: Udayachandran
7 October 2020, 4:41 pm
Ambulance Kidney - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு கிட்னி பொருத்த, விபத்தில் பலியான இளைஞரின் சிறுநீரகம் மதுரையில் இருந்து ஆம்புலன்சு மூலம் சுமார் மூன்றரை மணி மணி நேரத்தில் வந்து சேர்ந்தது.

மதுரையில் விபத்தில் பலியான இளைஞரின் சிறுநீரகம் மதுரையில் இருந்து ஆம்புலன்சு மூலம் நாகர்கோவில் கொண்டுவரபட்டது. மதுரையை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 27) என்பவர் விபத்து ஒன்றில் பலியானார். இவரது கிட்னியை தானம் செய்ய உறவினர்கள் விரும்பினர்.

இந்நிலையில் நாகர்கோவில் ஜெயசேகரன் மருத்துவமனையில் கிட்னி மாற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நாகர்கோவிலை அடுத்த பறக்கை சேர்ந்த வெங்கடேஷ்(வயது 43) என்பவருக்கு இந்த கிட்னியை பொருத்துவதற்காக மதுரையிலிருந்து கிட்னி கொண்டுவரபட்டது.

இதற்காக வழிநெடுகிலும் உள்ள போக்குவரத்து நெருக்கடிகளை சமாளிக்க ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் பணியாற்றி, ஆம்புலன்ஸ் விரைவாக சென்றடைய உதவினர். மூன்றரை மணி நேரத்தில் மதுரையில் இருந்து நாகர்கோவிலி உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தடைந்தது. இதனையடுத்து கிட்னியை வெங்கடேஷுக்கு பொருத்தும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கிட்னியை மதுரையிலிருந்து சுமார் மூன்றரை மணி மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் மூலமாக மின்னல் வேகத்தில் கொண்டு வந்த ஓட்டுநரை பொது மக்கள் வெகுவாக பாராட்டினார்.

Views: - 87

0

0