என் அப்பா மரணத்திற்கு நீ தான் காரணம் : சடலத்தை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய மகன்!!

By: Udayachandran
4 October 2020, 7:11 pm
Quick Share

கன்னியாகுமரி : மருத்துவமனையில் அனுமதித்ததால்தான் தனது தந்தை இறந்ததாக கூறி ஆம்புலன்ஸ் ஓட்டுநரை மகன் அரிவாளால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த கிணறு தோண்டும் கூலி தொழிலாளியான குட்டப்பன் (வயது 60). இவர் உடல் நலகுறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் இவருக்கு கொரோனா சோதனை மேற்கொண்டதில் கொரோனா உறுதியாகி கடந்த ஒரு வாரமாக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

இவர் இன்று உயிர் இழந்ததை தொடர்ந்து அவரது‌ வீட்டு தோட்டத்தில் உடல் அடக்கம் செய்ய சுகாதார துறை வழிகாட்டுதல்படி சுகாதார துறை அதிகாரிகள் உடல் அடக்கம் செய்ய ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்தனர் .

அப்போது ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் உடல் கொண்டு வரப்பட்டது. அப்போது ஆம்புலன்ஸ் ஓட்டி வந்த நாகர்கோவிலை சேர்ந்த பொன் ஜோஸ் என்பவரை இறந்த கொரானா நோயாளியின் மகன் சிபின் என்பவத் தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் தான் உயிரிழந்ததாக கூறி திடீரென அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்த சுகாதார துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதை தொடர்ந்து தலையில் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பொன் ஜோஸ் குழித்துறை அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதை தொடர்ந்து இறந்த நோயாளியின் உடலை வேறு யாரும் அடக்கம் செய்ய முன் வராத காரணத்தால் பாஜகவினர் உடலை அடக்கம் செய்தனர் .இது சம்பந்தமாக களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Views: - 49

0

0