2026ல் தே.ஜ கூட்டணி ஆட்சி என பகல் கனவு காணுகிறார் அமித்ஷா : அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2025, 1:29 pm

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் அரசு சார்பில் நடைபெறும் கோடை விழாவில் துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய ரகுபதி, 2026 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று அமித் ஷா பகல் கனவு கண்டு அதை தெரிவித்து வருகிறார்.

2026 ஆம் ஆண்டு கண்டிப்பாக திமுக ஆட்சி தான் மீண்டும் வரும். அமித்ஷா திமுக ஆட்சி அமைக்கும் என்று எப்படி கூறுவார் அதிமுக ஆட்சி தான் அமையும் என்று கூறுவார்.

தமிழகத்தின் கல நிலவரத்தை அமித்ஷா தெரிந்து கொள்ளாமல் பேசியுள்ளார். முருகன் மாநாட்டை வைத்து எந்தவிதமான சூழ்ச்சியோ குழப்பமா செய்ய வேண்டிய அவசியம் திமுகாவிற்கு இல்லை

அங்கு குழப்பத்தையும் சூழ்ச்சியும் விளைவித்தது பாரதிய ஜனதா கட்சி தான். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருக்கும்போது தமிழகத்தில் இருந்து மத்திய அரசிற்கு சென்ற வருவாய் எவ்வளவு தற்போது மத்திய அரசுக்கு தமிழகத்தில் இருந்து செல்லும் வருவாய் எவ்வளவு என்பதை அமித்ஷா கூறிவிட்டு தமிழகத்திற்கு மூன்று மடங்கு வருவாய் பாஜக ஆட்சியில் தருகிறோம் என்று கூறியிருக்க வேண்டும்

அன்றைக்கு தமிழகத்திலிருந்து சென்ற வருவாய்க்கு ஏற்ப நிதி பிரிக்கப்பட்டது ஆனால் தற்போது மத்திய அரசுக்கு செல்லும் வருவாய் அளவிற்கு மூர்த்தி வரவில்லை அதுதான் குற்றச்சாட்டு

தமிழகத்தின் வளர்ச்சித் திட்ட பணிகளை முடக்க வேண்டிய அவசியம் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு கிடையாது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் நிதி தருவோம் என்று கூறுவது யார்? பாஜக ஆளும் மகராஷ்டிரா மாநிலத்திலேயே மத்திய அரசு வீதான விமர்சனங்கள் வந்திருக்கிறது. இதே நிலை இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் விரைவில் எதிரொலிக்கும்

மத்திய அரசு வழங்கும் நிதியிலிருந்து செய்யப்படும் பணிகள் திமுக அரசு விமர்சனத்திற்கு பதில் அளித்த அமைச்சர் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் நிதியை தான் நாங்கள் செலவு செய்கிறோம் இது போன்று பேசுவது தவறு என்றார்

  • the reason behind lal salaam movie flop was rajinikanth sir extended cameo said by vishnu vishal ரஜினிகாந்த் ரசிகர்களை சீண்டிப்பார்த்த விஷ்ணு விஷால்! களேபரமான சமூக வலைத்தளம்?
  • Leave a Reply