அமித்ஷா ஓகே சொல்றாரு.. இல்லைனு இபிஎஸ் சொல்கிறார் : இதுலயே தெரியல : திருமாவளவன் விமர்சனம்!
Author: Udayachandran RadhaKrishnan28 May 2025, 1:27 pm
கரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வி.சி.க தலைவர் திருமாவளவன் திருச்சிக்கு நேற்று இரவு வருகை தந்தார்.
திருச்சியிலிருந்து கரூர் புறப்படுவதற்கு முன்பாக தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர்க்கட்சிகள் ஓர் அணியில் திரள வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதிலிருந்து அவர் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வலுவாக இருப்பதாக ஒப்புக்கொண்டு உள்ளார். அதே போல்ச் எதிர்க்கட்சிகள் இன்னும் ஓர் அணியாக வடிவம் பெறவில்லை என்பதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதையும் படியுங்க: யாரும் சாப்பிடாதீங்க.. POISON இருக்கு.. கோவை பிரபல பிரியாணி கடை உணவில் பல்லி… ஷாக் வீடியோ!
பா.ஜ.க – அதிமுக கூட்டணி ஆளுக்கொரு திசையில் பயணிக்கும் நிலையில் உள்ளதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். திமுக தலைமையிலான கூட்டணி தான் கூட்டணி என்கிற வடிவத்தோடு வலுவாக இயங்குகிறது.

அதிமுக பாஜக கூட்டணி வைத்திருந்தாலும் கூட அவர்களுக்கு இடையே ஒரு பிணைப்பு ஏற்படவில்லை. இந்த நொடி வரை தமிழகத்தில் ஒரே ஒரு கூட்டணி தான் இருக்கிறது அது திமுக தலைமையிலான கூட்டணி என்பதையும் நயினார் நாகேந்திரன் ஒப்புக்கொண்டுள்ளார்.

திமுக கூட்டணி மீது பாஜகவிற்கு இருக்கும் பயத்தை திமுக கூட்டணிக்கு இருப்பதாக நயினார் நாகேந்திரன் மாற்றி பேசுகிறார்.கூட்டணி அறிவித்த பின்பும் கூட பாஜக – அதிமுக இணைந்து செயல்படுவது போல் எந்த தோற்றமும் தெரியவில்லை.
அமித்ஷா கூட்டணி ஆட்சி என கூறிவிட்டு சென்றார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் அப்படி கூறவில்லை என்கிறார் அதிலிருந்தே அவர்களுக்குள் முரண் இருப்பது தெரிகிறது என்றார்.