ஊரடங்கிலும் ஏழை எளிய மக்களின் பசியை போக்கி சேவை : அன்னம் வழங்கிய அம்மா உணவகம்!!!

Author: kavin kumar
9 January 2022, 4:22 pm
Quick Share

திருச்சி: முழு ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் திருச்சியில் அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன.

தமிழகத்தில் கடந்த ஜெயலலிதா ஆட்சியின்போது ஏழை எளிய மக்கள் பசியை போக்கும் வகையில் அம்மா உணவகம் துவங்கப்பட்டது. இதில் குறைந்த இட்லி ரூபாய் ஒன்றுக்கும், மதியம் உணவு வகைகள் லெமன், சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம் என ரூபாய் மூன்று என்ற விலையில் நிறைந்த தரத்துடன் உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்த அம்மா உணவகத்தில் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் உணவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான ஏழை, எளிய பொதுமக்கள் உணவருந்தி பசியை தீர்த்துக் கொள்கின்றனர். இது ஏழைகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது.

தொடர்ந்து அதிமுக ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு திமுக ஆட்சி அமைந்தவுடன் அம்மா உணவகம் மூடப்படும் என பேசப்பட்டு வந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏழை எளிய மக்களின் பசியை தீர்க்கும் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என அறிவித்தார். இந்நிலையில் இன்று தமிழகத்தில் முழு ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட போதிலும், திருச்சி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் அம்மா உணவகம் வழக்கம் போல செயல்பட்டு வருகிறது.அந்த வகையில், திருச்சி ரயில் நிலையம் முன்பு உள்ள அம்மா உணவகத்தில் இன்று காலை முதல் தொடர்ந்து உணவுகள் விற்பனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மதியமும் வழங்கிய உணவை ஏழை எளிய மக்கள் அருந்தி சென்றனர்.

Views: - 381

0

0