பத்மநாபபுரம் நவராத்திரி திருவிழா : சுசீந்திரத்தில் இருந்து அம்மன் சிலை திருவனந்தபுரத்திற்கு சென்றது!!

By: Udayachandran
13 October 2020, 3:15 pm
Amman - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தமிழக காவல் துறையினர் துப்பாக்கி அணி வகுப்பு மரியாதையுடன் அம்மன் சாமி பல்லக்கில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலுக்கு புறப்பட்டு சென்றது.

திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாப்பட்டு வந்தது. ஆதன் பின்னர் 1840 ம் ஆண்டில் சுவாதிதிருநாள் மகாராஜாகாலத்தில் திருவனந்தபுரத்திற்கு இந்த விழா மாற்றப்பட்டது. இந்த நவராத்திரி விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் குமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் வேளிமலை முருகன் பத்மநாபபுரம் தேவார கட்டு சரஸ்வதி அம்மன் சாமி சிலைகள் அரசு மரியாதையும் திருவனந்தபுரம் கொண்டு செல்வது பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இதில் இரு மாநில அரசு பிரநிதிகளும் காவல்துறையினரும் பக்தர்கள் பொது மக்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான நவராத்திரி விழா 17 ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில் அம்மன் சாமி சிலை பல்லக்கில் ஊர்வலமாக சுசீந்திரத்தில் இருந்து புறப்பட்டு செல்ல வேண்டும். மேலும் இந்த சாமி சிலைகள் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு 16 ம் தேதி சென்று சேர வேண்டும். ஆனால் தற்பொழுது ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகள் உள்ளதால் மாநிலம் விட்டு மாநிலம் செல்லவும் கோவில் சாமி சிலைகள் பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து செல்ல கேரளா அரசும் குமரி மாவட்ட நிர்வாகமும் தடை விதித்தது.

இதனால் ஏமாற்றம் அடைந்த பக்தர்களும் பல்வேறு இந்து அமைப்பினரும் தடையை நீக்க கோரி போராட்டங்கள் நடத்தினார்கள். இந்நிலையில் அம்மன் சாமி சிலை பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து செல்ல விதிக்கப்பட்டு இருந்த தடையை கேரளா அரசும் குமரி மாவட்ட நிர்வாகமும் நீக்கியதோடு அம்மன் சாமி சிலை பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு செல்ல அனுமதி அளித்தது.

இதனை தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி இன்று தமிழக காவல் துறையின் துப்பாக்கி அணிவகுப்பு மரியாதையுடன் அம்மன் சிலை பல்லக்கில் சுமந்தவாறு எடுத்து செல்லப்பட்டது இந்த அம்மன் சாமி சிலை வரும் 16 ம் தேதி திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலை சென்று அடைகிறது.

Views: - 60

0

0