முதியவர்களின் காலில் விழுந்த அமமுக வேட்பாளர் : ஆசி வாங்கி வாக்கு சேகரிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 March 2021, 1:41 pm
AMMK Candidate -Updatenews360
Quick Share

ஈரோடு : மேற்கு சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் சிவசுப்பிரமணியன் முதியவர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சட்டபேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிவசுப்பிரமணியன் மக்களிடம் குக்கர் சின்னத்திற்கு எளிய முறையில் வாக்கு பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று முத்தம்பாளையம், சத்யா நகர் உள்ளிட்ட பல பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர் திடீரென முதியவர்களின் கால்களில் விழுந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதனை சற்றும் எதிர்பாராத முதியவர்கள் வேட்பாளரை தடுத்து ஆசிவழங்கி வாழ்த்தி அனுப்பினர். வேட்பாளர்கள் குறிப்பிட்ட வயது வாக்காளர்களை கவருவதற்காக பல்வேறு யுக்தியை கையாண்டு வருவது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது

Views: - 61

0

0