சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி விபத்து.. நடைபாதையில் தூங்கியவர் மீது காரை ஏற்றி கொன்ற எம்.பி.,மகள் கைது..!

Author: Vignesh
18 June 2024, 6:06 pm

சென்னையில் நடை பாதையில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் மீது காரை ஏற்றுக்கொன்ற ஆந்திர எம் பி யின் மகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை பெசன்ட் நகர், டைகர் வரதராச்சாரி சாலையோரமாக நடை பாதையில் சிலர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து நடை பாதையில் தூங்கிக் கொண்டிருந்த ஊரூர்குப்பம் பகுதியைச் சேர்ந்த சூர்யா (வயது 22) என்பவர் மீது ஏறியது.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சூர்யாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், வரும் வழியில் அவர் உயிரிழந்து விட்டார். விபத்தை பார்த்ததும் மக்கள் அந்த காரை தடுக்க முயன்றனர். காரில் இருந்த இரண்டு பெண்களும் காருடன் தப்பி சென்றனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளில் பதிவானதை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், காரில் பெண்கள் இருந்ததாக சம்பவத்தை பார்த்தவர்கள் கூறினர். விசாரணையில், விபத்தை ஏற்படுத்தியவர் ஆந்திர ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி., பீடா மஸ்தான் ராவின் மகள் பீடா மாதுரி என தெரிய வந்துள்ளது. சென்னை பெசன்ட் நகரில் வசிக்கும் பீடா மஸ்தான் புதுச்சேரியில் தொழில் செய்து வருகிறார். இதனையடுத்து, பீடா மாதுரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனை தொடந்து, பீடா மாதுரி மீது விபத்தின் மூலம் மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஆந்திர எம் பி யின் மகள் பீடா மாதிரி காவல் நிலையத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?