ஆந்திரா டூ திருப்பூர்… கஞ்சா மற்றும் பட்டாகத்திகளுடன் வந்த கும்பல் : உள்ளூரில் இருந்தே திட்டம் போட்ட ‘பலே’ கேடிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 December 2022, 2:09 pm

ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வந்த ஆறு பேர் கைது. ஒன்பது கிலோ கஞ்சா, ஆயுதங்கள் பறிமுதல்.

ஆந்திராவிலிருந்து திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக மாநகரப் போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாநகர தனிப்படை போலீசார் முத்தணம்பாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகப்படும்படி வந்த சரக்கு ஆட்டோவை ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில் ஆட்டோவில் ஒன்பது கிலோ கஞ்சாவும், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதும் தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார், சரக்கு ஆட்டோவில் வந்த திருப்பூர் முத்தணம்பாளையத்தை சேர்ந்த ஜெபராஜ், கரட்டாங்காடு சேர்ந்த ராஜா, செட்டிபாளையத்தை சேர்ந்த தீனதாயளன், பாலகிருஷ்ணன், சுதன், வீரபாண்டியை சேர்ந்த லட்சுமணன் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர்.

மேலும் இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து திருப்பூரில் சப்ளை செய்து சம்பாதிக்க திட்டமிட்டதும் விசாரணையில் தெரிய வந்தது .

இதனையடுத்து 6 பேரையும் கைது செய்த நல்லூர் போலீசார் குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!