எலிகளுடன் 35 வருடமாக குடிசையில் வாழ்ந்து அருள் வழங்கிய எலியன் சித்தர் மரணம் : ரூ.7 லட்சம் நிதி திரட்டி பக்தர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 May 2022, 9:16 pm
Siddhar - Updatenews360
Quick Share

மதுரை : பிரபல எலியன் சித்தர் ஆன்ட்ரூஸ் பாபா மரணமடைந்ததால் பக்தர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள வைத்தியநாத பிரதான சாலையின் அருகே உள்ள ஓலைக் குடிசையில் வசித்து வந்தவர் எலியன் சித்தர் ஆன்ட்ரூஸ் பாபா.

இவர் அதே பகுதியில் சுமார் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் ஓலைக் குடிசையில் எலிகளுடன் வசித்து வந்ததால் அவர் அப்பகுதி மக்களால் எலியன் சித்தர் என அழைக்கப்பட்டு வந்தார்.

சித்தர் யாரிடமும் பேசாமல் இருப்பவர். சித்தரை கண்டு அவரிடம் அருள் வாக்கு வாங்கி ஆசி பெற வேண்டும் என பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். மக்கள் சித்தரை காண அதிக அளவில் மாலை நேரத்தில் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் எலியன் சித்தர் ஆன்ட்ரூஸ் பாபா காலமானார். இது குறித்த தகவல் அறிந்த அவரின் பக்தர்கள் கூடினர். அவருக்கு ஆளுயர மாலைகள் அணிவித்துச் சென்றனர்.

மக்கள் கொடுக்கும் எளிய உணவுகளை உண்டு வாழ்ந்து வந்த ஆண்ட்ரூஸ் சித்தர், வயது முதிர்வின் காரணமாக அவரது 90-வது வயதில், இன்று (மே 4) அதிகாலை 3 மணி அளவில் காலமானார். அவரது இறுதி ஊர்வலம் மாலை 4 மணி அளவில் நடைபெற்றது.

அவர் வாழ்ந்த குடிசையிலேயே அவரை அடக்கம் செய்ய இட வசதி இல்லாத காரணத்தால், மக்கள் தாமாக முன்வந்து அவரது குடிசை அமைந்திருந்த சாலையிலேயே 7 லட்சம் ரூபாய் பணம் சேகரித்து சிறு இடம் ஒன்றை வாங்கி அதில் ஆண்ட்ரூஸ் சித்திரை அடக்கம் செய்தனர்.

Views: - 912

1

0