கூடுதலாக பானி பூரி கேட்டு தராததால் ஆத்திரம்.. பேக்கரியை அடித்து நொறுக்கி அடாவடி : தலைமறைவான இருவர் கைது!

Author: Udayachandran RadhaKrishnan
8 February 2024, 1:29 pm

கூடுதலாக பானி பூரி கேட்டு தராததால் ஆத்திரம்.. பேக்கரியை அடித்து நொறுக்கி அடாவடி : தலைமறைவான இருவர் கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீர்த்தம் பேருந்து நிலையத்தில் வெங்கடேஸ்வரா பேக்கரி கடை உள்ளது.

இந்த கடையினை செல்வராஜ் ஈஸ்வரி என்பவர் நடத்தி வருகிறார். கடந்த ஐந்தாம் தேதி இரவு ஒன்பது மணிக்கு பேக்கரி கடையில் புதுப்பட்டி சேர்ந்த ராமசாமி ( 33) என்பவரும் சந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த தீர்த்தகிரி ( 34) என்பவரும் பாணி பூரி சாப்பிட்டுள்ளனர்.

அப்போது மேலும் பூரி கேட்டுள்ளனர். அதற்கு கடைக்காரர் பாணி பூரி தீர்ந்து விட்டது என்று கூறியுள்ளார். உடனே தீர்த்தகிரி எனக்கே பாணி பூரி இல்லையா என்று கேட்டு பாணி பூரி கடை அருகே உள்ள பாணி பூரி கடை கண்ணாடியை கட்டையால் உடைத்துள்ளார் .மறுநாள் இரவு மீண்டும் பேக்கரி கடையின் கண்ணாடியை உடைத்துள்ளனர்.

பின்னர் கடையின் உரிமையாளர் 100 க்கு போன் செய்ததன் பேரில் ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டு தீர்த்தகிரியை தேடினர்.

இந்த நிலையில் இவர்கள் இருவர் மீதும் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் வெங்கடேஸ்வரா பேக்கரி உரிமையாளர் செல்வராஜ் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் மேற்கண்ட இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.

இந்த நிலையில் இந்த மனு மீது வழக்கு பதிவு செய்த நிலையில் உரிய நடவடிக்கை இல்லை எனக்கூறி தமிழ் நாடு வணிகர் சங்க பேரவை துணைத் தலைவர் தெய்வசிகாமணி தலைமையில் கடை அடைப்பு போராட்டம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில் பேக்கரி கண்ணாடிகளை உடைத்த இருவரையும் பல இடங்களில் தேடி இன்று போலீசார் அவர்களை கைது செய்தனர். கைது செய்த இருவரையும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

  • wine party right after the wedding... Netizens shower Priyanka திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!