பணம் தர மறுத்ததால் ஆத்திரம் : பல்பொருள் அங்காடியில் பொருட்களை உடைத்த திருநங்கை!!

18 April 2021, 3:16 pm
transgender -Updatenews360
Quick Share

கோவை : பல்பொருள் அங்காடி ஒன்றில் ஊழியர்கள் பணம் தர மறுத்ததால் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை திருநங்கை ஒருவர் தள்ளிவிட்டு செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை வடவள்ளி பேருந்து நிறுத்தம் அருகே மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான பல்பொருள் அங்காடி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடைக்கு வந்த திருநங்கை ஒருவர் ஊழியர்களிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

உரிமையாளர் கடையில் இல்லாததால் தங்களால் பணம் தர இயலாது என கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த திருநங்கை கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அங்கிருந்த பொருட்களை கீழே தள்ளிவிட்டார்.

பின்னர் கைகளைத் தட்டியபடி மீண்டும் கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், ஊழியர்கள் பணம் தராத ஆத்திரத்தில் மீண்டும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களை கீழ தள்ளி சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினார். இந்த காட்சிகள் கடையின் சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 42

0

0