தமிழக காவல், சீருடைப் பணி அதிகாரிகளுக்கு அண்ணா பதக்கம் : முதல்வர் அறிவிப்பு..!

14 September 2020, 12:47 pm
Quick Share

தமிழக காவல், சீருடைப் பணி அதிகாரிகள் 131 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை மற்றும் தமிழ்நாடு விரல் ரேகைப் பிரிவு அலுவலர்கள் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும்,

மற்றும் பணியில் ஈடுபாடு, அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டும் தமிழக காவல், சீரடைப் பணி அதிகாரிகள் 131 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி ஆணையிட்டுள்ளார். அத்துடன் பதக்கம் பெறும் அதிகாரிகளுக்கு அவர்களின் பதவிக்கேற்ப மானியத்தொகையும், வெண்கல பதக்கமும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

Views: - 7

0

0