எங்கள குறை சொல்லாதீங்க : பெரியார் சிலை அவமதிப்பு குறித்து அண்ணாமலை கருத்து!!
27 September 2020, 5:34 pmஈரோடு : பெரியார் சிலைக்கு காவி துண்டு அணிவித்த விவகாரத்தில் பா.ஜ.கவை குறை சொல்ல வேண்டாம் என பா.ஜ.க துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் பா.ஜ.க துணை தலைவர் அண்ணாமலை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பெருந்துறை சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் கிழக்கு மேற்கு சட்டமன்ற தொகுதி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் பெரியார் சிலைக்கு காவிதுண்டு அணிவித்ததில் பாஜகவை குறைசொல்ல வேண்டாம். இதனை அரசியல் ஆக்க கூடாது என கூறினார்.
தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை கட்டுபடுத்த வேண்டும்.பா.ஜ.கவின் ஒரே வேட்பாளர் மோடிதான். தமிழ்நாட்டில் தேர்தல் நேரம் என்பதால் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த தலைவர்களுக்கு வேறு வாய்ப்பு வழங்கப்படும் என கூறினார்.
நீட் தேர்வை பாதுகாப்பாக நடத்தி முடிக்கப்ப்பட்டது. பள்ளிகளுக்கு தேர்வு குறித்து இன்னும் அறிவிப்பு வரவில்லை. பா.ஜ.க வலுவாக தமிழகத்தில் காலூன்றும், வேளாண் சட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. எதிர்கட்சிகளின் போராட்டத்திற்கு மக்களிடம் ஆதரவு கிடைக்காது என்றார்.