பால் விலை உயர்வு குறித்து விமர்சிக்கும் அண்ணாமலை.. ஒரே ஒரு வார்த்தையில் அமைச்சர் சொன்ன பதில்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 November 2022, 5:03 pm

பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் மு பெ சாமிநாதன் பெருமிதமாக கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் 69ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதில் மாநில செய்தித் துறை அமைச்சர் மு பெ சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், கோவை கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், மற்றும் பல்லடம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர திமுக செயலாளர் ராஜேந்திர குமார், ஒன்றிய சேர்மன் தேன்மொழி மற்றும் அதிகாரிகள் கட்சி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்துகொண்டு சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்க நிர்வாகிகளுக்கு அமைச்சர் மு.பே சாமிநாதன் பரிசளித்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பேச்சு கட்டுரை போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு பரிசு பொருட்களையும் அமைச்சர் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக முதல்வரின் ஆணையின்படி மாநிலம் முழுவதும் 69 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் பல்லடத்திலும் இவ்விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. கூட்டுறவு சங்கங்களை நம்பி கடன் பெற்று உள்ள விவசாயிகள் பொதுமக்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்பாக செயல்படும் கூட்டுறவு சங்க நிர்வாகிகளுக்கு பரிசை அளித்து பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் மாநிலம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பொதுமக்கள் பெற்ற பயிர்க் கடன் மற்றும் நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 63 ஆயிரத்து 7 88 பேர் பயனடையும் வகையில் சுமார் 463 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர் கடன் மூலம் 26 ஆயிரத்து 7 17 விவசாயிகள் 279 கோடி ரூபாய் பயிர் கடன் பெற்றது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நகை கடன் பெற்றவர்கள் 274 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு மொத்தம் 62833 பேர் பயனடைந்துள்ளனர் 553 கோடியே 43 லட்சம் ரூபாய்க்கு கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் மேம்பாலானையும் திருப்பூர் மாவட்டத்தை பொருத்தவரை கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல்பட்டு உள்ளன. அதேபோல பொதுமக்களிடமிருந்து வர பெற்றுள்ள கோரிக்கை மனுக்கள் குறித்து திமுக அரசு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து அவர் மேலும் கூறுகையில் தேங்காய்க்கு விலை இல்லாத காரணத்தால் நியாய விலை கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் வழங்கப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பெரும்பாலும் தமிழகத்தில் கடலை எண்ணெய் புழக்கத்தில் உள்ளது பிற மாநிலங்களில் மட்டுமே தேங்காய் எண்ணெய் பயன்பாடு அதிகம் உள்ளதால் இது குறித்து முதல்வர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்தார்.

மேலும் மதுரையில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் நிதியமைச்சர் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என்று தெரிவித்த கருத்து குறித்து அமைச்சரிடம் கேட்டபோது அது குறித்து தானும் பத்திரிக்கை செய்தியில் பார்த்ததாகவும் அந்த செய்தியில் உண்மையில்லை என்றும் அவர் கூறினார்.
கூட்டுறவுத்துறை உணவுத்துறை இரண்டும் ஒரே துறையாக மாற்றப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அதில் எவ்வித குறைபாடும் இருப்பதாக தெரியவில்லை அது குறித்த ஆலோசித்து முதல்வர் முடிவு எடுப்பார் என்று தெரிவித்தார்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த பல்லடத்தில் புறவழிச்சாலை அமைக்கப்படுமா தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மு.பே சாமிநாதன் கூறுகையில் 7 மீட்டராக நாகப்பட்டினம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை இருந்தது அப்போதைய திமுக ஆட்சிக்காலத்தில் 11 மீட்டர் ஆக விரிவாக்கம் செய்யப்பட்டது.

தற்போது சாலை திட்ட பணிகளுக்கு மத்திய அரசிடம் நிதி கேட்டபோது மத்திய அரசு திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது இருந்த போதும் மாநில அரசு புறவழிச்சாலை அமைக்க மத்திய அரசிடம் தொடர்ந்து தனது கோரிக்கையை வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைவாக இருப்பதாகவும் கடந்த காலத்தில் அதிமுக அரசு ஒருமுறை மின் கட்டண உயர்வை அமல்படுத்தியதாகவும் இருந்த போதும் விசைத்தறியாளர்களுக்கு மின் கட்டண சலுகை வழங்கியிருப்பதாகவும் மேலும் குறைப்பது குறித்து முதல்வருடன் மின்சாரத் துறை அமைச்சரும் பேச்சு நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

பால் கட்டண உயர்வு குறித்து கேள்வி எழுப்பிய போது அமைச்சர் சாமிநாதன் கூறுகையில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் பால் விலை உயர்வு குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பேசி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அமைச்சர் சாமிநாதன் அது குறித்து பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!