பதவியேற்க கோவையில் இருந்து புறப்பட்டார் அண்ணாமலை..! பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!!

14 July 2021, 10:11 am
annamalai - Updatenews360
Quick Share

கோவை : பா.ஜ.க மாநில தலைவராக பொறுப்பேற்க அண்ணாமலை கோவையில் இருந்து யாத்திரையாக புறப்பட்டார். அவருக்கு பா.ஜ.க தொண்டர்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பாஜகவின் மாநில தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தலுக்கு முன் தனது ஐபிஎஸ் பதவியைத் துறந்து விட்டு தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த அவருக்கு துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் குறுகிய நாட்களிலேயே மாநில தலைவர் என்ற பதவியை அடைந்துள்ளார்.

தொடர்ந்து வரும் 16ம் தேதி அவர் சென்னையில் பொறுப்பேற்க உள்ளார். இந்த நிலையில், இரண்டு நாள் பயணமாக கோவையிலிருந்து யாத்திரையாக சென்னை செல்கிறார்.

இதற்காக கோவையில் வ.உ.சி மைதானத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் குவிந்து மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து அவரை வழியனுப்பி வைத்தனர்.

முன்னதாக கோனியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அண்ணாமலை அங்கிருந்து வ.உ.சி மைதானம் வந்து தொண்டர்களின் மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

கோவையில் இருந்து முதலில் கரூர் செல்லும் அன்ண்ணாமலை, நாளை சென்னை செல்கிறார். அவர் செல்லும் வழியெல்லாம் பல இடங்களில் மலர் தூவி வரவேற்பு அளிக்க பா.ஜ.க.,வினர் ஏற்பாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 132

0

0