பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்…? தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி

Author: kavin kumar
4 November 2021, 10:28 pm
Quick Share

மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைத்த போதிலும் தமிழக அரசு குறைக்காமல் மவுனமாக இருப்பது ஏன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல் ,டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை குறைந்தது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தியது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்களும் வாட் வரியை குறைத்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை குறைந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் விலை குறைப்பு, பண்டிகை காலத்தில் பொதுமக்களுக்கான ஆறுதலாக, நிவாரணமாக, கூடுதல் மகிழ்ச்சியைத் தருவதாக உள்ளது. புதுச்சேரி, கர்நாடகா, கோவா, குஜராத், திரிபுரா, மணிப்பூர், உத்தராகண்ட் மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைத்துள்ள நிலையில், தமிழக அரசு என்ன செய்ய போகிறது. பெட்ரோல், டீசல் விலையில் வாட் வரியை குறைப்பதில் தமிழக அரசு மவுனம் காப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Views: - 257

0

0