5 எல்லாம் பத்தாது.. பத்து லட்சம் கொடுங்க: பட்டாசு கடை வெடிவிபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்காக குரல் எழுப்பிய அண்ணாமலை!!

Author: Udhayakumar Raman
27 October 2021, 7:31 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் பட்டாசு கடை வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் நடந்த பட்டாசு கடை தீவிபத்தில் தற்போது வரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். 11பேர் படுகாயங்களுடன் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், அதுமட்டுமல்லாமல் இந்த விபத்து எதிர்பாராத விதமாக நடந்து உள்ளதாகவும், இது போல் இனி வரும் காலங்களில் நடக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு தலா 5 லட்சம் அறிவித்துள்ளது. கூடுதலாக 5 லட்சம் நிவாரண நிதி கூடுதலாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் காயமடைந்த களுக்கு மேல் சிகிச்சை தேவை என்றால் அதற்கு உறுதுணையாக இருந்து அவர்களின் மருத்துவ சிகிச்சை உதவி செய்யும் என்று தெரிவித்தார். இந்த சங்கராபுரம் வெடிவிபத்து சம்பவத்தில் தமிழக அரசு நல்ல முறையில் கையாண்டுள்ளது எனக் கூறினார்.

Views: - 157

0

0