திமுக ஆளும் தமிழ்நாட்டில் ரவுடிகளின் ஆட்சி- வீடியோவை பகிர்ந்து ஸ்டாலின் மீது பாய்ந்த அண்ணாமலை!

Author: Prasad
1 August 2025, 2:09 pm

முக ஸ்டாலின் ஆளும் தமிழ்நாட்டில் போலீஸாருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளதாக எதிர்கட்சிகள் பலரும் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Annamalai shared the video of rogues abuse police and criticize dmk

தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அவர் விலக்கப்பட்டிருந்தாலும் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் திமுகவை குறித்தும் அவ்வப்போது தனது விமர்சனங்களை வைத்து வருகிறார் அண்ணாமலை. அந்த வகையில் தற்போது அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

அந்த வீடியோவில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட நபர்களை போலீஸ் வாகனத்தில் வைத்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்கின்றனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படுகிறது. அது சண்டையாகவும் மாறுகிறது. ஒருவருக்கொருவர் தகாத  வார்த்தைகளை பயன்படுத்தி திட்டிக்கொள்கிறார்கள். போலீஸார் அவர்களை தடுக்க முயல்கின்றனர். ஆனாலும் அவர்களை மீறி அவர்கள் செயல்படுகிறார்கள். 

இந்த வீடியோவை பகிர்ந்த அண்ணாமலை, “திமுக அரசிற்கு கீழ் ரவுடிகளின் ஆட்சி. போலீஸாரின் வாகனத்தில் சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லும்போது ரவுடிகள் போலீஸாரிடம் அத்துமீறுகின்றனர். இந்த சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீது துளியளவும் பயமில்லை என்பதை இது காட்டுகிறது. உண்மையிலேயே மன வருத்தம் தருகிறது” என பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!