வசூலுக்காக யாத்திரை போகும் அண்ணாமலை.. அதுவும் வெறும் 2 கி.மீ.. பேசுவதற்கு அருகதையே இல்ல : ஜோதிமணி அட்டாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 November 2023, 11:14 am

வசூலுக்காக யாத்திரை போகும் அண்ணாமலை.. அதுவும் வெறும் 2 கி.மீ.. பேசுவதற்கு அருகதையே இல்ல : ஜோதிமணி அட்டாக்!!

கரூரில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாஜக தலைவர் அண்ணாமலையின் வசூல் யாத்திரை கரூரில் மிகப்பெரிய தோல்வியடைந்துள்ளதாகவும், நேற்று வெறும் 2 கி.மீட்டர் தூரம் மட்டுமே நடந்து சென்றுள்ளார்.

ஆனால் இன்று கிருஷ்ணராயபுரம் உப்பிடமங்கலம் சந்தையில் வெறும் 100 மீட்டர் தூரமே நடந்து செல்கின்றார். ஆனால் எங்கள் (காங்கிரஸ்) தலைவர் ராகுல்காந்தி நடைபயணம் கன்னியாகுமரி டூ காஷ்மீர் வரை சென்று நடந்து சென்றோம், நானும் சென்றோம் என்ற அவர், எங்கள் நடைபயணத்தில் எங்கேயும் வசூல் செய்ய வில்லை, ஆனால் பாஜக அண்ணாமலையின் யாத்திரை வெறும் வசூல் செய்வதற்காக மட்டுமே என்ற காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, மணல் மாபியாக்களிடமிருந்து மட்டும் மாதம், மாதம் ரூ 60 லட்சம் வசூல் செய்துள்ளார்.

ஆனால் அங்கேயும் ஈ.டி ரைடு சென்றுள்ளதாகவும், ஆனால் அண்ணாமலை லஞ்சம் வாங்குவதையும், மோடி லஞ்சம் வாங்குவதையும் அமலாக்கத்துறை பார்த்து கொண்டு இருக்கலாம், ஆனால் மக்கள் பார்த்து கொண்டு இருக்க மாட்டார்கள் ? என் மீது எந்த குற்றமும் இல்லை, ஆனால் என்னிடம் இருந்து வெள்ளை அறிக்கை கேட்கும் அண்ணாமலைக்கு பதில் அளித்த காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, ஏன் பாஜக மோடி கட்சி வித்யாசமின்றி, நடந்து கொள்வதோடு, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் பகுதிபாரபட்சம் காட்டுவதாகவும், ஆகவே பாஜக இதே கரூர் தொகுதியிலும், தமிழக அளவில் 12 வாரங்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி கொடுக்காமல் சம்பளம் கொடுக்காமல் அப்பாவி தொழிலாளர்கள் ஏங்கி வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் , அதானி தொடங்கி தற்போது அண்ணாமலை வரை லஞ்சம் வாங்குவது அதிகரித்து வருவதாகவும், ஒரு கவுன்சிலராக ஜெயிக்க கூட முடியாத ஒருத்தர், சொந்த தொகுதியில் கூட எம்.எல்.ஏ வாக ஜெயிக்க முடியாத அண்ணாமலை, தற்போது மாநிலத்தலைவராக மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

பாஜக தலைவர் அண்ணாமலையின் உறவினர்கள் எத்தனை நபர்கள் என்ன என்ன தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் என்ன செய்து வருகின்றார்கள் என்பதை விரைவில் தெரிவிப்பேன் என்றும், மோடியும், அண்ணாமலையும் வெறும் சூட்டிங் மட்டுமே நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த யாத்திரையே ஒன்று சூட்டிங் மட்டுமே நடத்தி வருவதாகவும் மற்றொன்று வசூலுக்காகவும் நடத்தி வருவதாகவும், காவிரி பிரச்சினையில் மிகவும் கடுமையான நிலைப்பாட்டினை காங்கிரஸ் கமிட்டி எடுத்த நிலையில், அதை கேள்வி கேட்க எந்த அருகதையும் அண்ணாமலைக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!