வேட்பு மனு தாக்கல் செய்த அண்ணாமலை.. கோனியம்மன் கோவிலில் வழிபாட்டின் போது நடந்த திருமணம் : பாஜகவினர் நெகிழ்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
27 March 2024, 11:50 am

வேட்பு மனு தாக்கல் செய்த அண்ணாமலை.. கோனியம்மன் கோவிலில் வழிபாட்டின் போது நடந்த திருமணம் : பாஜகவினர் நெகிழ்ச்சி!

கோவை நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் மாநில தலைவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வேட்பு மனு தாக்கல் செய்தார்,.

முன்னதாக பெரியகடை வீதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அங்கு திருமணம் நடைபெற்ற புதுமண தம்பதிகளான கோவைப்புதூரை சேர்ந்த ரவி-தேவிகா தம்பதியினர் அண்ணாமலையின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

இந்நிகழ்விற்கு 1989 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வீர கணேசன் தாயார் அழைத்துவரப்பட்டிருந்தார் அவரிடம் அண்ணாமலை ஆசி பெற்றார்.நிகழ்வில் வானதி சீனிவாசன் அர்ஜுன் சம்பத் சுதாகர் ரெட்டி உட்பட பாஜக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!