‘அண்ணாத்த’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு: தரமான கொண்டாட்டத்துக்கு தயாராகும் ரஜினி ரசிகர்கள்..!!

Author: Aarthi Sivakumar
11 October 2021, 7:02 pm
Quick Share

ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள‌ திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்ளிட்ட முக்கிய திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமான தயாரித்து வருகிறது. இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவுபெற்று தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் நவம்பர் 4ம் தேதி தீபாவளியையொட்டி பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

இதற்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ஏற்கனவே இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதையடுத்து டி இமான் இசையில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் ஒரு பாடலை மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார்.

இந்நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்த அண்ணாத்த படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்தின் டீசர் வரும் அக்டோபர் 14ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாத்த படக்குழுவின் இந்த அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் வெறித்தனமான கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகின்றனர்.

Views: - 461

4

0