சிறுவனை காரில் கடத்திய விவகாரம்… தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது..!!
Author: Udayachandran RadhaKrishnan25 September 2025, 6:11 pm
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வேணு ஜனனி தம்பதியின் 4 வயது மகன் யோகேஷ் குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ப்ரீ.கே.ஜி படித்து வருகிறார்.
இதனிடையே இன்று மதியம் சுமார் 12.30 மணி அளவில் அவரது தந்தை வேணு தனது இருசக்கர வாகனத்தில் பள்ளியிலிருந்து யோகேஷை அழைத்து வந்து வீட்டுக்குள் சென்றபோது
கர்நாடகா போலி பதிவு எண் கொண்ட காரில் வந்த மர்ம நபர்கள் வேணு மீது மிளகாய் பொடி தூவி விட்டு 4 வயது குழந்தை யோகேஷ் காரில் கடத்திச் சென்றுள்ளனர்
இதனையடுத்து 6 தனிப்படைகளை அமைத்து குழந்தையை தேடும் பணியில் வேலூர் மாவட்ட காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், சிறுவன் யோகேஷை கடத்திச் சென்ற கும்பல், திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அருகே சாலையில் விட்டு விட்டு தப்பி சென்றனர்.

இந்த விவவகாரத்தில் குழந்தையை கடத்தியதாக குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவரை நேற்று மாலையே போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தநர். விக்ரம் என்பவர் தப்பி ஓடிவிட்டார். அவரை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் தப்பி ஓடிய குடியாத்தம் பார்வதிபுரம் பகுதி சேர்ந்த விக்ரம் கைது செய்து குடியாத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.
