கோவைக்கு மற்றுமொரு சிறப்பு : சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த உலகின் மிகப்பெரிய மணி மண்டபம்!

22 April 2021, 2:10 pm
Cbe Mani Mandapam -Updatenews360
Quick Share

கோவை : கோவையில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய மணி மண்டபம் இந்தியா புக் ஆஃப் ரெக்காட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

கோவை தீத்திபாளையம் பகுதியில் என்.என்.ஆர்.சி கட்டுமான நிறுவனம் சார்பில் 2 ஆயிரத்து 607 சதுரடியில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இது உலகின் நீளமான மற்றும் பெரிய மணிமண்டபமாக அங்கீகரிக்கப்பட்டு இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து என்.என்.ஆர்.சி நிறுவனர் தினகர் பெருமாள் கூறுகையில், “இந்த மணி மண்டபத்தை முழுமையாக அமைக்க ஓராண்டு ஆனது. துவக்கத்தில் இந்த மண்டபம் சாதனைகளை நிகழ்த்தும் என்பது தெரியவில்லை. ஆனால் தற்போது விருதுகளை வாங்கியுள்ளது பெருமையளிக்கிறது.

உலகில் எந்த பகுதியிலும் 2 ஆயிரத்து 607 சதுரடியில் மணிமண்டபம் அமைக்கப்படவில்லை. இதனை அமைக்க சுமார் ரூ.50 லட்சம் செலவாகியுள்ளது. காற்றோட்டத்துடன் கூடிய இத்தகைய மணிமண்டபத்தில் தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபடலாம் அதோடு, மக்கள் கூடும் இடமாகவும் பயன்படுத்தலாம்.” என்றார்.

Views: - 231

0

0