திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை : கணக்கில் வராத ரூ.21 ஆயிரம் பறிமுதல்!!
20 November 2020, 10:41 amதிருப்பூர் : திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத 21,710 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி தலைமையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத பணம் 21,710 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திடீரென ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது
0
0