வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடிகை மீரா மிதுனின் ஜாமீன் மனு தள்ளுபடி

Author: kavin kumar
23 August 2021, 9:51 pm
Meera mithun Boy- Updatenews360
Quick Share

சென்னை: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில்வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 11ம் தேதி மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த 14ம் தேதி கைது செய்யப்பட்டனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், தங்களுக்கு ஜாமின் வழங்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.அவர்கள் இருவரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையில் காவல்துறையினர், “நடிகை மீரா மிதின் பேசியது சமுதாயத்தில் பதற்றத்தை உண்டாக்கும் வகையில் உள்ளது. இதனால் மோதல் ஏற்படவும் வாய்ப்புள்ளது,. மீரா மிதுன் இவ்வாறு பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். புலன் விசாரணை தற்போது ஆரம்ப நிலையில் உள்ளது” எனத் தெரிவித்தார்.இந்த வாதங்களைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. எனவே நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் சாம் அபிஷேக் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ள நீதிமன்றம் இந்த ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Views: - 201

0

0