பண்பாடு, கலாச்சாரத்தை சீரழிக்கும் எந்த படம் வந்தாலும் தடை விதிக்கப்படும்! அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை!!

By: Udayachandran
11 October 2020, 4:15 pm
Minister Kadamboor - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : தமிழர்களின் பண்பாடு, கலச்சாரம் ஆகியவற்றை சீரழிக்கும் வகையில் எந்த படம் வந்தாலும், யாருடைய படமாக இருந்தாலும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாற்றுகட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர்.செ.ராஜூ முன்னிலையில் மாற்று கட்சிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.

தொடர்ந்து பார்க் சாலை எதிரே மனித உரிமை காக்ககும் கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தினையும் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ திறந்து வைத்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் நாளை மறுநாள் தூத்துக்குடிக்கு வருகை தரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 23 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கேன்சர் தடுப்பு மையத்தினை திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வு பிரச்சார கேசட்டினை பிரதமர் மோடி அன்றைய தினம் டெல்லியில் வெளியிடுகிறார். அதே நேரத்தில் முதல்வர் தூத்துக்குடியில் பிரச்சார கேசட்டினை வெளியிட உள்ளதாகவும் கூறினார்.

திமுக கூட்டணி உடைவது மட்டுமல்ல சிதறிவிடும், அங்கு ஒத்த கருத்து உள்ள கட்சிகள் இல்லை,கூட்டணி தர்மத்தினை கடைபிடிக்கும் ஒரே கட்சி அதிமுக,கூட்டணி தர்மத்தின் படி பா.ம.க அன்புமணி ராமதாஸ், த.மா.க ஜி.கே.வாசனுக்கு நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவிக்கான இடங்கள் அதிமுக ஒதுக்கி தந்தது.

கூட்டணி கட்சிகளை மிதிக்கும் கட்சி திமுக,கூட்டணி அமையும் போது தமிழகம் பல்வேறு காட்சிகளை பார்க்க உள்ளது. திமுகவில் கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர தயராக உள்ளனர். அது நிச்சயமாக நடக்கும் என்று கூறினார்.

ஆபாச படத்திற்கு (இருட்டு அறையில் முரட்டு குத்து -2) ஒரு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.சென்சார் போர்டு மத்தியரசு கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஆபாச காட்சிகளை நீக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திரசுக்கு வலியுறுத்தும், தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை சீரழிக்கும் எந்த காட்சிகளாக இருந்தாலும், திரைப்படங்களாக இருந்தாலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திரைப்படங்கள் மக்களுக்கு நல்ல கருத்துக்களை கூறும் சாதனங்களாக இருக்க வேண்டும். எம்.ஜீ.ஆர் நடித்த திரைப்படங்கள் படங்களாக இல்லை மக்களை வழிநடத்தும் பாடங்களாக இருந்தன. பெற்றோர்களை மதிக்க வேண்டும், தாயை வணங்க வேண்டும் என்று எல்லா படங்களிலும் நல்ல கருத்துக்களை கூறுவார். திரைப்படம் என்பது சாதரணம் கிடையது. மக்களின் மனதில் கருத்துக்களை பதிய வைக்கவும், மக்களை தன் பக்கம் ஈர்க்க கூடிய சக்தி திரைப்படங்களுக்கு உண்டு, அதன் மூலமாக நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும்.

தமிழர்களின் பண்பாடு, கலச்சாரம் ஆகியவற்றை சீரழிக்கும் வகையில் எந்த படம் வந்தாலும்,யாருடைய படமாக இருந்தாலும் அதனை தடுக்கும் வகையில் அரசு முழுகவனத்துடன் சென்சார் போர்டு மூலமாக தடைவிதிக்க தமிழக அரசு ஆவணம் செய்யும் என்றார்.

அதிமுக கூட்டணி அமைக்கும் போது எம்.ஜீ.ஆர், ஜெயலலிதா தான் முதல்வர் வேட்பாளர் என்று முன்னிறுத்தப்பட்டனர். அது போல தான் தற்பொழுது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிறுத்தப்பட்டுள்ளார். தமிழகத்தில் அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை தங்குகிறது என்றார்.

Views: - 46

0

0