எம்பிஏ, எம்சிஏ, எம்டெக் சேர்க்கைக்கான ‘டான்செட்’ தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!!

18 January 2021, 1:55 pm
TANCET exam - updatenews360
Quick Share

தமிழகத்தில் எம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான ‘டான்செட்’ தேர்வுக்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்.பிளான் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ‘டான்செட்’ எனப்படும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது. இந்த தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

இந்த ஆண்டுக்கான நுழைவுத்தேர்வு மார்ச் 20, 21ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு ஜனவரி 19ம் தேதி முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி ‘டான்செட்’ தேர்வுக்கான ஆன்லைன் பதிவு நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்.பிளான் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் www.annauniv.edu இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தின் நிலை குறித்து பிப்ரவரி 17ம் தேதி அறிந்துகொள்ளலாம். தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை மார்ச் 5ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Views: - 0

0

0