அரபிக் கடலில் கடும் சீற்றம் : தண்ணீர் புகுந்ததால் கடலோர மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம்!!

15 May 2021, 10:11 am
Kumari Cyclone- Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : குமரி – கேரளா போன்ற அரபி கடலோரம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக 30க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் புகுந்ததால் தமிழக கேரள நிவாரண முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டள்ளனர்.

தென் கிழக்கு அரபி கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது வலு பெற்று வடக்கு நோக்கி நகர்ந்து வரும் நிலையில் அரபி கடல் பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்து வரும் நிலையில் கடல் பகுதிகளும் சீற்றமாக காணப்படுகிறது.

குறிப்பாக கொல்லங்கோடு மற்றும் கேரளா பகுதியான பொழியூர்,பருத்தியூர்போன்ற அரபி கடலோரம் கடல் ஆக்ரோஷாமாக எழுந்தத்தில் ,30 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் தமிழக – கேரளாவை இணைக்கும் கடற்கரை சாலைகளிலும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் தமிழக கேரள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Views: - 123

0

0